ஞாயிறு, ஜூலை 23, 2017

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காவலர் மரணம்! - சுட்டவர் தீவகத்தில் கைது?

யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த, பொலிஸ் சார்ஜன்ட் இன்று அதிகாலை 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் வயிற்றில் சூடுபட்டு படுகாயமடைந்திருந்த, 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமரத்ன இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இவர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 18 வருடங்கள் பணியாற்றியவர். நீதிபதியின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துள்ளார்.

அதேவேளை, நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலாளி, மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல் பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து யாழ். நகரப்பகுதி பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.

இந்நிலையில் தீவகப் பகுதிக்கு தப்பிச் சென்ற மர்ம நபரை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட நபர் யாழ் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை.