www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 13, 2017

அரசியல் கைதிகளைச் சந்தித்தார் ஐ.நா விசேட நிபுணர்

ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன், அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்கு நேற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளைச் சந்­தித்­தார். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் பாதிப்பு, சிறைச்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பி­லும் அவர் கேட்­ட­றிந்­தார்.
ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன், அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்கு நேற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளைச் சந்­தித்­தார். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் பாதிப்பு, சிறைச்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பி­லும் அவர் கேட்­ட­றிந்­தார்.

மனித உரி­மை­கள் மற்­றும் தீவி­ர­வாத எதிர்ப்பு தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர், பென் எமர்­சன், ஐந்து நாள்­கள் பய­ண­மாக இலங்­கைக்கு வந்­துள்­ளார். வவு­னி­யா­வுக்கு அவர் நேற்று மதி­யம் வருகை தந்­தார். வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­த­ரன் தலை­மை­யி­லான குழு­வி­னரை அவர் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர். இந்­தந் சந்­திப்பு வவு­னியா நீதி­மன்­றக் கேட்­போர் கூடத்­தில் நடை­பெற்­றது. வடக்கு மாகா­ணத்­தின் மாவட்ட நீதி­ப­தி­க­ளும் இந்­தச் சந்­திப்­பில் கலந்து கொண்­ட­னர்.

சந்­திப்­பின் பின்­னர் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்கு பென் எமர்­சன் குழு­வி­னர் சென்­ற­னர். அங்கு தனி­யான அறை­யில், தமிழ் அர­சி­யல் கைதி­க­ளான எம்.சுலக்­சன், பி.அர­விந்­தன், என்.உமர்­ கா­தப், ஆர்.ஜெகன், என்.சிவ­லிங்­கம் ஆகி­யோ­ரைத் தனித் தனி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னர். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பு, கைதி­க­ளின் மன­நிலை, அவர்­கள் மீதான சித்­தி­ர­வதை தொடர்­பில் அவர் தக­வல்­க­ளைத் திரட்­டி­னார்.

புத்­த­கக் கட்­டுக்­களை தலை­மேல் வைத்து கொட்­டன்­க­ளால் அடித்து துன்­பு­றுத்­தி­யமை உள்­ளிட்ட பல்­வேறு சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் அர­சி­யல் கைதி­கள் அவ­ரி­டம் எடுத்­துக் கூறி­யுள்­ள­னர். இவ்­வாறு சித்­தி­ர­வதை மேற்­கொண்டு பல­வந்­தப்­ப­டுத்தி குற்­ற­ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­ட­தை­யும் அவர்­கள் தெரி­வித்­த­னர். இப்­படி பெறப்­பட்ட வாக்­கு­மூ­லத்தை அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றம் ஏற்­றுக் கொள்­கின்­ற­மை­யும் சிறப்பு அறிக்­கை­யா­ள­ரி­டம் அர­சி­யல் கைதி­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

“அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தன்­னைக் கொலை செய்ய முயற்­சித்த தமிழ் அர­சி­யல் கைதியை பொது­மன்­னிப்­பில் விடு­தலை செய்­தி­ருந்­தார். கடந்த காலங்­க­ளில் கிளர்­சி­யில் ஈடு­பட்ட மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. அவர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­னர். எமது பிரச்­சினை தற்­போது அர­சி­யல் மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே அர­சி­யல் கொள்கை முடிவு எடுத்து எம்மை விடு­விக்க வேண்­டும்” என்று தமிழ் அர­சி­யல் கைதி­கள் சார்­பில் சிறப்பு அறிக்­கை­யா­ள­ரி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது