புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

கட்சி நடவடிக்கையில் 14பேர்: ஓபிஎஸ் - இபிஎஸ் பேச்சுவாரத்தையில் முடிவு?

இரு அணிகளில் இணைப்பு பேச்சுவாரத்தையில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் கட்சியை வழிநடத்தும் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வழிகாட்டு குழு தலைவராகவும், துணைத்தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். மேலும் ஓ.பி.எஸ் தரப்பில் ஒருவரும், எடப்பாடி தரப்பில் ஒருவரும் என நான்கு பேர் கொண்ட வழிகாட்டு குழு இறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஒரு நிர்வாக குழுவும் ஏற்படுத்ததப்பட்டுள்ளது. அதில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேர், எடப்பாடி தரப்பில் 5 பேர் என 10 பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக வழிகாட்டு குழுவில் 4 பேரும் நிர்வாக குழுவில் 10 பேரும் என மொத்தம் 14 பேர் கட்சி நடவடிக்கைகளை செயல்படுத்துவார்கள்.

இரு அணிகளுக்கும் இந்த குழுவில் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த, அடுத்த பேச்சுவார்த்தையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதை இரு அணிகளும் இணைந்து அறிவிக்கும் என ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகியும், கொங்கு மண்டல முன்னாள் அமைச்சருமான ஒருவர் நம்மிடம் கூறினார்