வியாழன், ஆகஸ்ட் 17, 2017

148 மில்லியன் ரூபா கொடுத்தால் காணிகள் விடுவிப்பு!

புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வழங்குவதாக கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்த பின்னர் முல்லைத்தீவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் 148 மில்லியன் ரூபா வழங்குவதாக கூறியிருந்தார். குறிப்பிட்ட நிதி கிடைத்த பின்னர் முல்லைத்தீவில் இராணுவத்தின் முக்கிய முகாம்கள் வேறிடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறும் .இதனடிப்படையில் முல்லைத்தீவில் உள்ள 111 ஏக்கர் காணி விரைவில் விடுவிக்கப்பட உள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.