வியாழன், ஆகஸ்ட் 24, 2017

17 வயது பாடசாலை மாணவி பட்டப் பகல் கொலை

கல்கமுவ, சாலிய, அசோகபுரத்தில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் நேற்றுக் காலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாணவியின் தாய் முறுக்கு உற்பத்தியில் ஈடுபடும் அயல் வீடொன்றில் பணியாற்றுகின்றனார். வழமைபோன்று காலை பணிக்குச் சென்று மதியம் 12 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய தாய் அதிர்ச்சியடைந்தார்.
மகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் உயிரழந்து காணப்பட்டார். அதைப் பார்த்து கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் கூடியுள்ளனர். பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பிரதேச வாசிகளால் ஒருவர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் இருந்து பேருந்து ஒன்றில் ஏறி தம்புத்தேகம நோக்கிச் சென்றுள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பேருந்தின் நடத்தினர் அது தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலருக்குத் தகவல் வழங்கியுள்ளார். பேருந்தைப் பின்தொடர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள் அந்த நபரைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நபர் போதைப் பொருள் மற்றும் குடிபோதையில் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
உயிழந்த மாணவி 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.