வியாழன், ஆகஸ்ட் 31, 2017

பற்றி எரியும் ரகினே – 18,000 ரொஹிங்கியா முஸ்லிம்கள் இடம்பெயர்வு


மியான்மரின் ரொஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 நாள்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்களாதேஸூக்குப் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிக்கப்படுகின்றது.
அதேவேளை, ரகினே மாநிலத்தில் குறைந்தது 10 இடங்களில் பரந்த அளவில் தீ வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு இது தொடர்பான செய்மதிப் படங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மதீப்பிட்டை பெறுவதற்கு மியான்மர் அரசு சுயாதீன கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் 100 கிலோமீற்றர் பகுதியை தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ரொஹிங்கிய போராளிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதலின்போது தீ மூட்டப்பட்ட பகுதியை விடவும் இது பெரிய பிரதேசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்மதி ஊடாகத் தரவுகளை பெற்றிருக்கும் மனித உரிமை கண்காணிப்புக் குழு ஆயிரத்து 500 வீடுகள் வரை அழிக்கப்பட்டுள்ளன என்று கணித்துள்ளது.

மியான்மரில் ரொஹிங்கியாக்களை இலக்கு வைத்து 2016 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் சுமார் 87 ஆயிரம் அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.பற்றி எரியும் ரகினே – 18,000 ரொஹிங்கியா முஸ்லிம்கள் இடம்பெயர்வு