வியாழன், ஆகஸ்ட் 24, 2017

19எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ்!


முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19பேர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்கள். 

இந்நிலையில் இன்று அதிமுகவின் கொறடாவான ராஜேந்திரன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும், எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

இதையடுத்து அரசு கொறடா பரிந்துரையை ஏற்ற, சபாநாயகர் தனபால், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.