புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

உத்தரப் பிரதேச வெள்ளம்..! 20 லட்சம் பேர் பாதிப்பு, 69 பேர் பலி


உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. ஏற்கெனவே அசாம் மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 24 மாவட்டங்களைச் சேர்ந்த 2,523 கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களும், தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய விமானப் படையின் விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ச்சியாக மழை பொழிவதால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுவருகிறது.