திங்கள், ஆகஸ்ட் 28, 2017

20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், மாகாணங்களில் காபந்து அரசு

20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், மாகாணங்களில் காபந்து அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும்அவிக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்ரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், மாகாணங்களில் காபந்து அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

"ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தும் வரை - காலாவதியாகும் மாகாண சபைகளின் பதவிக் காலத்துக்குப் பின்னர், அங்கு காபந்து அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

கலைக்கப்பட்ட மாகாண சபைகளை தேர்தல் நடத்தும் வரையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. இது அதிகாரப்பகிர்வு கோட்பாட்டுக்கு எதிரானது. மாகாண சபைகளின் குறிப்பாக, வடக்கு , கிழக்கு மாகாண சபைகளின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சட்டங்களை மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்த முடியும் அவர் மேலும் கூறியுள்ளார்.