தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 16, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை  கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இராணுவ அதிகாரிகள் கையளித்தனர்.

கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனங்காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக மாவட்ட செயலர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்களும் உடனிருந்தனர்.