தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

வடக்கில் 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளி­டையே நடத்­தப்­பட்ட நேர்­மு­கத்­தேர்­வில் தெரி­வா­ன­வர்­க­ளின் பெயர்ப்­பட்­டி­யல் எதிர்­வ­ரும் 25ஆம் திகதி வெளி­யி­டப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ ரன் தெரி­வித்­தார்.வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளி­டையே நிய­ம­னத்­திற்­கான நேர்­மு­கத்­தேர்­வு­கள் கடந்த ஜுன் மாதம் 28, 29, 30ஆம் திக­தி­க­ளில் இடம்­பெற்­றன.
வடக்கு மாகா­ணத்­தின் 5 மாவட்­டங்­க­ளை­யும் சேர்ந்த 1046 தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் நேர்­மு­கத் தேர்­வு­க்கு தோற்­றி­னர். மூன்­று­ நாள்கள், மூன்று அணி­க­ளாக தேர்­வு­கள் இடம்­பெற்­றன.
வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளி­டையே நடத்­தப்­பட்ட நேர்­மு­கத்­தேர்­வில் தெரி­வா­ன­வர்­க­ளின் பெயர்ப்­பட்­டி­யல் எதிர்­வ­ரும் 25ஆம் திகதி வெளி­யி­டப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ ரன் தெரி­வித்­தார்.வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளி­டையே நிய­ம­னத்­திற்­கான நேர்­மு­கத்­தேர்­வு­கள் கடந்த ஜுன் மாதம் 28, 29, 30ஆம் திக­தி­க­ளில் இடம்­பெற்­றன. வடக்கு மாகா­ணத்­தின் 5 மாவட்­டங்­க­ளை­யும் சேர்ந்த 1046 தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் நேர்­மு­கத் தேர்­வு­க்கு தோற்­றி­னர். மூன்­று­ நாள்கள், மூன்று அணி­க­ளாக தேர்­வு­கள் இடம்­பெற்­றன.

நேர்­மு­கத் தேர்­விற்­குத் தோற்­றிய தொண்­டர்­க­ளில் 676பேருக்கு நிரந்­தர நிய­ம­னம் வழங்­கு­வ­தற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது. இத­ன­டிப்­ப­டை­யில் பட்­டி­யல் தயார் செய்­யப்­ப­டு­கின்­றது. தெரி­வா­கி­யி­ருக்­கும் தகு­தி­வாய்ந்த 676 ஆசி­ரி­யர்­க­ளி­ன­தும் பெயர்ப் பட்­டி­யல் எதிர்­வ­ரும் 25ஆம் திகதி அனுப்­பி­வைக்­கப்­ப­டும் என கல்வி அமைச்­சி­னால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பெயர்ப் பட்­டி­யல் கிடைத்­த­தும் உடன் நிய­ம­ னத்துக்கான ஏற்­பா­டு செய்­யப்­ப­டும்.அதே­வேளை, வடக்­கில் பணி­யாற்­றும் ஒப்­பந்த ஆசி­ரி­யர்­கள் 176பேரை­யும் இந்த 676 நிய­ம­ னத்­துக்குள் உள்­ள­டக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் மேற்­கொண்ட முயற்­சி­யின் பய­னாக அவர்­க­ளுக்கு தனி­யான ஏற்­பாட்­டின் கீழ் நிய­ம­னம் வழங்க கல்வி அமைச்சு இணக்­கம் தெரி­வித்­தி­ருந்­தது. இந்த ஒப்­பந்த ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நிய­ம­னம் தொடர்­பான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் வரும் 22ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது என்­றார்