தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

இலங்கையில் 677 வெளிநாட்டு அகதிகள்!


சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 677 அகதிகள் இலங்கையில் புகலிடம் கோரியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது
. வெளிநாடுகளைச் சேர்ந்த 312 அகதிகள் இலங்கையில் புகலிடம் கோரி, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கைக் காரியாலயத்தில் இந்த ஆண்டு பதிவு செய்து கொண்டுள்ளனர். இலங்கையில் அகதி அந்தஸ்து கோரி பதிவு செய்து கொண்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 677 எனத் தெரிவிக்கப்படுகிறது.
   
இலங்கையில் புகலிடம் கோரியுள்ளவர்களில் அதிகளவானவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் என குறிப்பிடப்படுகிறது. எனினும் இவ்வாறு அகதி அந்தஸ்து கோரியுள்ள எவருக்கும் இலங்கையில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறதுடன், அகதிகள் தொடர்பான சர்வதேச பிரகடனங்களில் இலங்கை கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.