ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்கமீண்டும் மழை! சென்னை மக்களுக்கு நல்ல செய்திபதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கைவைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச்.ராஜா போர்க்கொடிஅடுத்த ரஜனி படத்தை பகிஸ்கரிப்போம் , லண்டன் நாம்தமிழர் 70

புதன், ஆகஸ்ட் 23, 2017

வித்தியா கொலை வழக்கு - மாவை உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.றியால், நேற்று உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.றியால், நேற்று உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவியின் கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என, அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தை மன்றில் சமர்ப்பித்தனர்.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேலும், குறித்த வழக்கு தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பாக சி.சி.டி.வி கமெரா பதிவுகளை ஆராய்ந்து மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவி