புதன், ஆகஸ்ட் 30, 2017

7 கோரிக்கைகளை முன்வைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையிட்டு அம்பாறை,
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த
காணாமல் வலிந்து போன
உறவுகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு
முன்னாள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறுவுகள் ஏற்பாட்டில்
இந்த கவனயீர்பு போராட்டம் இடம்பெற்றது.
இதில்
1இகாணாமற் போனோர் அலவலகச்சட்டத்தின் தற்போதுள்ள வரைபினை முற்றாக எதிர்க்கின்றோம்.
2.காணாமற்போனார் அலுவலகச் சட்டம் தொடர்பாக 12-06-2017 அன்று எம்முடனான சந்திப்பில் ஜனாதிபதி எமக்களித்த வாக்குறுதிகளின்படி இச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாத வரை இச்சட்டத்தினை நிராகரிக்கின்றோம்.
3.காணாமல் போனோர் அலவலகச் சட்டத்தில் பொறுப்புக் கூறும் பொறிமுறை நிச்சயம் உள்ளடக்கப்பட வேண்டும்.
4.யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை மிக விரைவில் வெளியிடவேண்டும்.
5. இரகசிய சிறை முகாம்களையும் அதிலுள்ளவர்களின் பெயர் பட்டியலையும் மிக விரைவில் வெளியிட வேண்டும்.
6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமத உறவுகளுக்காக நாம் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தகின்றோம்.
7. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு காரணமான அனைவரையும் விசாரிப்பதற்கும் தண்டிப்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் உடன்பட வேண்டும் என்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து சுலோகங்கள் மற்றும் காணால் போன தமது உறவுகளின் புகைப்படங்கள் ஏந்தியவாறு நூற்றுக்கனக்கான காணமால் போன உறவுகள் கலந்து கொண்டு தமது உறவுகள் மீண்டும் திரும்பிவரவேண்டும் என மங்கள விளக்கு ஏற்றி கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 180 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து எமது உறவுகளை வேண்டி வட கிழக்கில்
போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இரவு பகலாக கால நிலை மாற்றங்களைப் பொருட்படுத்தாது எமது போறாட்டம் தொடர்கிறது.
பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதம மந்திரி மற்றும்
ஜனபதிபதி ஆகியோரை நேரில் சந்தித்தும், விண்ணப்பங்களைக் கையளித்தும் இது
வரை எவ்வித பயனுமளிக்காத நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட
நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது குடும்ப உறவுகளின் விடயத்தில் நீதி
கேட்கும் நடவடிக்கையில் தளர்ச்சியில்லாமலும் அசாதாரண நம்பிக்கையிலும்
நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
நமது போராட்டத்தை உதாசீனம் செய்து சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு
சமாளிப்பதற்காக காணாமல் போனோர் அலுவலகம் ( ழககiஉந ழக ஆளைளiபெ Pநசளழளெ – ழுஆP) எனும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இச் சட்டம் எமது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்குவதற்கு துணை புரிந்த இராணுவம் பொலிஸ், ஆயுத துணைக் குழுக்கல் என்பவற்றை பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பது இச்சட்டத்தின் பிரிவுகளை தெளிவுற வாசித்தவர்களுக்கு புரிந்ததோர் விடயமாகும்.
இந் நிலையில் எந்தவொரு இராணுவத்தினரையோ பொலிசாரையோ இச் சட்டம்
பாதிப்பதற்கு அனுமதிக்க மாட்டோமென ஜனாதிபதி முதற்கொண்டு பல்வேறு
அமைச்சர்களும் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் ஆணித்தரமாகவும்
ஒற்றமையாகவும் கூறி வருகிறார்கள். அது மட்டுமன்றி வடகிழக்கு தமிழர்களின்
பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பிரதிநிதிகள் கூட இச் சட்டத்திற்கு எந்தவொரு முன்மொழிவுகளும் வழங்காது
ஆதரவளிப்பது கண்ணிர் கலந்த வேதனையாகவுள்ளது.
அதேவேளை தென்னிலங்கையினை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து வரும் சில அமைப்புக்கள் கொழும்பிலும் வவுனியாவிலும் இதர இடங்களிலும் அரசுக்கு சார்பாக ஆகஸ்ட் 30 ற்கான நிகழ்வுகளை நடாத்துகின்றனர். இது தொடர்பில் அவதானமாக செயற்படும் நாம் இவ்வாறான நிறுவனங்களின் நிகழ்சி நிரலுக்கு உள்ளாக்கப்படாமல் எச்சரிக்கையாக
செயற்படுமாறு வலிந்து காணாமல் போன உறவுகள் சார்பாக கேட்டுக் ள்கின்றோம்
என அவர்கள் தெரிவித்தனர்.