புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 26, 2017

8 அமைச்சர்கள், 60 எம்எல்ஏக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது: திவாகரன்

தங்களுக்கு 8 அமைச்சர்கள் மற்றும் 60 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், 2 நாட்களில் அவர்கள் அணி தாவி வருவார்கள் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.எல்.ஏ.க்கு அவர்களின் சட்டமன்ற  தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எவ்வாறு உள்ளதோ அதே போன்று அவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது அவர்களை அப் பதவியில் இருந்து இறக்கு வதற்காக எடுக்கக் கூடிய நடவடிக்கையும் சரியே என்று கர்நாடக நீதிமன்றம் கூறியிருக்கிறது.

எங்கள் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் கர்நாடக நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இணைத்து கடிதம் எழுதுவோம். இன்றைய நிலையில் 8 அமைச்சர்கள் உள்பட 60 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அவர்கள் 2 நாட்களில் அணி தாவி எங்களிடம் வருவார்கள். போக போக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். தனபாலை முதல்-அமைச்சராக ஆக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அனைவருமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படுகிறார். எனவே அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க மாட் டார். அவரது அமைச்சரவையில் ஊழல் செய்த 5 அமைச்சர்களுக்கு எதிராக கேள்விகள் கேட்டு விடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.