புதன், ஆகஸ்ட் 30, 2017

லஞ்சம் வாங்கிய பாடசாலை அதிபருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை

பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவியை இணைத்துக்கொள்வதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற முன்னாள் பெண் அதிபருக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது. பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு குறித்த முன்னாள் அதிபர் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 4 வருடங்கள் சிறைத்தண்டனை வீதம் 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.