தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

உண்ணாவிரதத்தில் குதித்தனர் அரசியல் கைதிகள்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு எதிராக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கோரி
இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் சுமார் 20 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அதனை துரிதப்படுத்துமாறு கோரியே இவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.