ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தம்மால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசகரும மொழிகள் மற்றும் சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள உறுதியளித்துள்ளதாகவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தம்மால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசகரும மொழிகள் மற்றும் சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள உறுதியளித்துள்ளதாகவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டினதும் அரசாங்கத்தினதும் இரண்டு பிரதான கட்சிகளினதும் கௌரவத்தை பாதுகாப்பதற்கு மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடையவர்கள் தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.