புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

எடப்பாடி நிபந்தனை: ஓபிஎஸ் அணியில் பலத்த விவாதம்!


அதிமுக அணிகள் இணைப்பு விசயத்தில் நீண்டுகொண்டே போவதற்கு முக்கிய காரணம் என்ன என்று விசாரித்ததில் நாம் டிடிவி தினகரன் அணியைச்சேர்ந்த முன்னாள் அமைச்சரும் பெருந்துரை தொகுதியின் எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாசலத்திடம் பேசியபோது,  ‘’முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிதி மற்றும் வீட்டு வசதித்துறை ஆகிய இரண்டு துறைகள் மட்டும் ஒதுக்குவதாக கூறப்பட்டிருக்கிறது.   இதை அவர்கள் ஏற்கவில்லையாம்’’ எனக்கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச்சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மொடக்குறிச்சி ஆர்.என்.கிட்டுச்சாமியிடம் பேசியபோது,  ‘’இணைப்பு விசயத்தில் எடப்பாடி தலைமையிலான அணி இணக்கமாக வரவில்லை.  அவர்கள் இன்றே முடியும் என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள்.   குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை அழகுபடுத்தி அங்கே ஓபிஎஸ்சையும் இபிஎஸ்சையும் ஒன்றாக நிறுத்தி தமிழக மக்களிடமும் அதிமுக தொண்டர்களிடையேயும் கட்சி ஒன்றிணைந்துவிட்டது என்று காட்ட நினைத்தார்கள். ஆனால், ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு உரிய மரியாதையை எடப்பாடி தலைமயிலான அணி கொடுக்கவில்லை.   இதனால் இணைப்பு நடவடிக்கை இன்னும் காலதாமதம் ஆகும்’’ என்று கூறினார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி, ஓபிஎஸ் தரப்புக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி எனக்கூறி இருக்கிறது.  இது ஓபிஎஸ் தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் , எம்.பிக்களிடையே பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.   எடப்பாடி தலைமையிலான அணி, கூறும் நிபந்தனையை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டால், இங்கு ஓபிஎஸ் தலைமையிலான அணி பிளவுபடும் என கூறுகிறார்கள்.