புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது அரசுக்கு எதிராக முழக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

சென்னை கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. வருவாய்த்துறை அலுவலர்களால் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். 

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென எழுந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர்கள் தங்களுக்கான நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேற முயன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர்களை போலீசார் வெளியேற விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தக் கூட்டம் பாதியில் முடிவடைந்தது. முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவர்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் சமாதானப்படுத்தினார். மாலையில் கோரிக்கைகள் குறித்து பேசலாம் என தெரிவித்துள்ளார்.