செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

குடாநாட்டில் தொடரும் அதிரடிப்படை வேட்டை! கொக்குவிலில் இளைஞன் கைது

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழு உறுப்பினர்
என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் 21 வயதுடையவராவார். கைது செய்யப்பட்டவர் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். யாழ். குடாநாட்டில் நடக்கும் கண்மூடித்தனமான கைதுகளை நிறுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரியிருந்த போதிலும், விசேட அதிரடிப்படையினரின் கைது வேட்டை தொடர்ந்து வருகிறது.