புதன், ஆகஸ்ட் 30, 2017

எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருத முடியாது என ஆளுநர் கூறினார்: திருமா பேட்டி

முருகன்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்க, சிறை
மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.
1991 மே 21-ம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, மனிதவெடிகுண்டு மூலம் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கிலிருந்து ஏழு தமிழர்களை விடுதலைசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவுக் குரல்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், வேலூர் சிறையில் 26 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி, ஏ.டி.ஜி.பி-க்கு மனு அளித்தார். மேலும், இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கும் முருகன் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, கடந்த 18-ம் தேதியிலிருந்து அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், சிறை விதிகளை மீறி அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.
பரிந்துரை