புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிராக இருக்கும் பலரையும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்து வருகிறார்.

அதிமுகவின் துணைப் பொதுசெயலாளர் பொறுப்பில் இருக்கும், டி.டிவி.தினகரன் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை மாற்றி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து வருகிறார்.

இந்தநலையில் இன்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படுவதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.