தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச கைது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது
செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கிறது என கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவரை அண்மையில் நேரில் சென்று அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்தியாவின் கிறிஷ் நிறுவனத்திடம் முறைகேடான வகையில் 70 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட விவகாரத்தில் நாமல் ராஜபக்ச மீது நிதிமோசடி விசாரணைப் பிரிவு விசாரணை நடத்திவருகிறது.
இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரியையே நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச அச்சுறுத்தியதாக தெரிவித்து நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அவருக்கான நோட்டீஸ் அனுப்புவதற்கான அனுமதியை நேற்று கோரியுள்ளனர்.
இதன்போதே நீதவான் சந்தன கலன்சூரிய இதனைக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது