தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

நிறைவேறியது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட வரைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட வரைபு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்ட வரைவுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ளன. 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சட்ட வரைவுக்காக தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

ஆயினும் சட்ட வரைபு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளை கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.