வியாழன், ஆகஸ்ட் 24, 2017

தமிழ் தலைவாஸ் - யூபி யோதா ஆட்டம் டை

Pro kabaddi: UP Yoddha Vs Tamil Thalaivas
புரோ கபடி (ProKabaddi) ஐந்தாவது சீசனின் 43-வது போட்டி  லக்னோவில் நேற்று நடைபெற்றது.  
இரண்டாம்  ஆட்டத்தில்  குரூப் பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணியோடு யூபி யோதா  அணி  மோதியது. லக்னோ யூபி யோதா அணியின் சொந்த மண் என்பதால் தமிழ் தலைவாஸ் அணிக்கு கடும் சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு அணிகளுமே நம்பிக்கையோடு களம் இறங்கின.
யூபி யோதாவின் ரிஷான்த் தேவதிகா  ரெய்டில் வந்து சாதாரண ரெய்டாக இல்லாமல்  சூப்பர் ரெய்டாக மாற்றி மூன்று புள்ளிகள்  எடுத்தார். ரசிகர்கள்  கொடுத்த உற்சாகம்  யூபி யோதா அணியினரை வெறிகொண்டு ஆட வைத்தது. முதல் பத்து நிமிடத்தில் 12 புள்ளிகள் எடுத்ததோடு தமிழ் தலைவாஸ் அணியை  ஆல் அவுட் ஆக்கி  பீதியை ஏற்படுத்தினர். ஆனாலும்  டிஃபன்சில் தமிழ் தலைவாஸ் சொதப்பியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 19-11 என யூபி யோதா முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் முதல் ஐந்து நிமிடத்தில்  யூபி யோதா 19 புள்ளியில் இருந்து நகரவில்லை. காரணம், தமிழ் தலைவாஸ் இரண்டாவது பாதியில் சுதாரித்து, வியூகம் வகுத்து, பி யோதாவை  ஆல் அவுட் ஆக்கியதோடு 20 புள்ளிகள் எடுத்து ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.
Pro Kabadi: UP Yoddha Vs Tamil Thalaivas
அதன் பின் இரண்டு அணிகளுக்குமே  ஆட்டம் சேசிங்தான்… ஒவ்வொரு ரெய்டும் திக் திக் ரெய்டுதான். கடைசி இரண்டு நிமிடம் பரபரப்பாக இருந்தது. யூபி யோதா  ஆணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிஷான்க் தேவதிகா 14 ரெய்டு புள்ளிகள்  எடுத்தார். கடைசி  ரெய்டில் அவர் ஒரே இடத்தில் நின்று நேரத்தைக் கடத்தி இருந்தால் யூபி யோதா வெற்றி பெற்று இருக்கும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. முடிவில் ஆட்டம் டையில் (33-33) முடிந்தது. இதற்கு காரணமான தமிழ் தலைவாஸ் அணி ரிஷான்க் தேவதிகாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  
இதுவரை தமிழ் தலைவாஸ் விளையாடிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மூன்று தோல்வி, இரண்டு டிரா செய்ததன் மூலம் 14 புள்ளிகளைப் பெற்று, குரூப் பி பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் சுதாரித்தால் மட்டுமே நாக் அவுட் சுற்றை நினைத்துப் பார்க்க முடியும். 
Pro Kabadi: UP Yoddha Vs Tamil Thalaivas
ஹரியானா வெற்றி (27-25)
மற்றொரு ஆட்டத்தில்  குரூப் ஏ பிரிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் கை ஒங்கி இருந்தது.  இரண்டு அணிகளுமே ரெய்டில் சொதப்பினாலும் ஹரியானா அணியினர் டிபன்சில் கலக்கினார்கள்.. அதனாலேயே  முதல் பத்தாவது நிமிடத்தில் தபாங் டெல்லியை ஆல் அவுட் ஆக்கி  பலத்தை நிரூபித்தனர்  ஹரியானா அணியினர்.