செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்! - சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவுள்ளது கூட்டமைப்பு

ஜெனிவாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை கொழும்பு முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­று சர்வதேவ சமூ­கம் அழுத்தம் கொடுக்க ­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­த­வுள்­ளது. இந்த வார இறு­தி­யில் கொழும்­புக்கு வரு­கின்ற அமெ­ரிக்க இராஜாங்கத் திணைக்களத் தின் தெற்கு மற்­றும் மத்­திய ஆசி­யா­வுக்­கான உத­விச் செய­லர் அலிஸ் வெல்ஸ் மற்­றும் இந்­தி­யா­வின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ராஜ் ஆகி­யோ­ரைச் சந்­திக்­கும்­போது கூட்­ட­மைப்பு இந்த வலி­யு­றுத்­தலை முன்­வைக்­க­வுள் ளது.

அமெ­ரிக்­கா­வில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பின்­னர் இரா­ஜாங்­கத் திணைக்­க­ளத்­தின் தெற்கு மத்­திய ஆசி­யா­வுக்­கான பதில் உத­விச் செய­ல­ராக நிய­மிக்­கப் பட்ட அலிஸ் வெல்ஸ் மற்­றும் இந்­தி­யா­வின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ராஜ் ஆகி­யோர் எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யும் செப்­ரெம்­பர் மாதம் முத­லாம் திக­தி­யும் கொழும்பு வரு­கின்­ற­னர்.

அந்­தத் தினங்­க­ளில் இந்­தி­யப் பெருங்­க­டல் மாநாடு அலரி மாளி­கை­யில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாநாட்­டில் அலிஸ் வெல்ஸ் முத­லாம் திகதி உரை­யாற்­ற­வுள்­ளார். அதற்கு முன்­ன­தாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் ஆகி­யோரை அவர் சந்­தித்­துப் பேசு­வார்.

இதே மாநாட்­டில் பங்­கேற்­ப­தற்­காக இந்­தி­யா­வின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ரா­ஜூம் கொழும்­புக்கு வரு­கி­றார். அவ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரைச் சந்­தித்­துப் பேச்சு நடத்­து­வார். இந்­தச் சந்­திப்­புக்­க­ளின் போது புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யில் ஏற்­பட்­டுள்ள தாம­தம் குறித்து அவர்­க­ளுக்­குக் கூட்­ட­மைப்பு எடுத்து விளக்­கும் என்று அதன் பேச்­சா­ளர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

‘‘ஐ.நா. தீர்­மா­னத்­தைக் கொழும்பு முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்து வதற்­கான அழுத்­தத்தை அமெ­ரிக்­கா­வும் இந்­தி­யா­வும் வழங்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­வோம்’’ என்­றார் அவர்