தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீது இன்று வாக்கெடுப்பு

உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தின் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று கூடிய கட்சித் தலைவர்கள் இதற்கான முடிவை எடுத்தனர்.
இந்த திருத்தம் தொடர்பில் ஆராய வேண்டியிருப்பதால் வாக்கெடுப்பை தாமதிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கையை விடுத்திருந்தது. எனினும் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜேவிபி கோரியது.
உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தின் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று கூடிய கட்சித் தலைவர்கள் இதற்கான முடிவை எடுத்தனர். இந்த திருத்தம் தொடர்பில் ஆராய வேண்டியிருப்பதால் வாக்கெடுப்பை தாமதிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கையை விடுத்திருந்தது. எனினும் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜேவிபி கோரியது.

வாக்கெடுப்பு இடம்பெற்று செப்டம்பர் 15க்கு முன்னர் அது அங்கீகரிக்கப்படுமானால் மாத்திரமே கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் என்று ஜேவிபி விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து இன்று வாக்கெடுப்பை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.