ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்னிப்புக் கோர வேண்டும்! - பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக சுவரொட்டி

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது” என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளதுடன், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சுவரொட்டியின் அடியில் யாழ்.மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.