வியாழன், ஆகஸ்ட் 24, 2017

குற்றம் நிரூபிக்கப்படும் வரை அமைச்சர் சிவனேசன் நிரபராதியே! -முதலமைச்சர்

புதிதாக பதவிப் பிரமாணம் செய்துள்ள வடமாகாணசபை அமைச்சர் சிவனேசன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதிதாக பதவிப் பிரமாணம் செய்துள்ள வடமாகாணசபை அமைச்சர் சிவனேசன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நடந்த அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரான சிவனேசன் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு அவருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
அதற்கு முதலமைச்சர், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே என பதிலளித்துள்ளார்.
மேலும், அதிகளவிலான அமைச்சுப் பதவிகள் முதலமைச்சரிடமே காணப்படுவதாக அறிகின்றோம் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், இதற்கு முன்னர் தன்னிடம் 16 அமைச்சுப் பதவிகள் இருந்ததாகவும் தற்போது அவற்றில் 12 அமைச்சுப் பதவிகள் மாத்திரமே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போல நீதிமன்ற நடவடிக்கைகளை அவர் முன்னெடுக்கலாம் எனவும் இதன்போது முதலமைச்சர் கூறினார்.