வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

ட்சத்திர ஹோட்டலில் முகாமிடும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை தாங்கள் விலக்கிக் கொள்வதாக மனு அளித்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
வார இறுதி நாள்களுக்காக அந்த ரிசார்ட்டில் ஏற்கெனவே முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததால், நான்காவது நாளான இன்று அந்த ரிசார்ட்டிலிருந்து வெளியேறுகிறார்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள். மதியம் 12 மணிக்கு மேல் அங்கிருந்து வெளியேறும் அவர்கள் புதுச்சேரி 100 அடி சாலையில் இருக்கும் ‘தி சன் வே மேனர்’ என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு விடுதிக்கு இடம் பெயர்கிறார்கள். இவர்களுக்காக 10 அறைகள் அங்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் அந்த எம்.எல்.ஏ-க்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துதருகிறார்.