புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் திடீர்ச் சந்திப்பு!panneerselvam
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று நே
ரில் சந்தித்துப் பேசினர். அணிகள் இணைப்பு குறித்துப் பேசப்படும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தினகரன் அணியினரை ஓரங்கட்டும் நடவடிக்கையும் பழனிசாமி அணியினர் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இரண்டு கோரிக்கைகள் வைத்தனர். அதில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் மற்றும் சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைகளை முதல்வர் பழனிசாமி அணியினர் நிறைவேற்றிவிட்டனர். இதை வரவேற்றுள்ள பன்னீர்செல்வம் அணியினர், பழனிசாமி அணியுடன் இணைவது குறித்து இன்று மாலை முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.