புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

ஆளுனருக்கு டெனீஸ்வரன் அவசர கடிதம்

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராகத் தானே தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார்

கடந்த- 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராகச் செயற்படுகின்றேன். தற்போதும் அந்த அமைச்சுப் பதவியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கு மாகாண அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையின் எதிரொலியாகவே இந்த அறிவிப்பை அவர் எழுத்துமூலம் விடுத்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரனைப் பதவி விலகுமாறு கட்சி கோரிய போது தான் பதவி விலகமாட்டேன், கட்சி தனக்குப் பெரிதில்லை எனவும் டெனீஸ்வரன் கூறியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவரும், பாராளுமனறக் குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், அவர் தொடர்பில் முடிவு எடுக்க வேண்டியுள்ளமையால் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டம் இன்று வவுனியாவில் கூடி முடிவெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.