புதன், ஆகஸ்ட் 23, 2017

விந்தனுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாமைக்கு விக்னேஸ்வரன் வருத்தம்

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சரவையில் விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வமடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சரவையில் விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறும், அவருக்குப் பதிலாக எமது கட்சியின் சார்பில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறும் வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனுக்குத் ரெலோ செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா நேற்று மாலை அவசர கடிதம் அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

காரணங்களை அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அக் கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். எனினும் விந்தன் கனகரத்தினம் எமக்கு வேண்டிய ஒருவர் அவரின் சேவை எமக்குக் கட்டாயமாக வேண்டும். அந்த வகையில் அவரை என் அமைச்சுடன் சேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அழைத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.