தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

ஆளுநருடன் திமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

சட்டசபை திமுக துணை தலைவர் துரைமுருகன் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள், விஜயதாரணி தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் சென்றனர்.

இந்த சந்திப்பின் போது, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் அறிவித்துள்ளதால் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் ஆளுநரிடம் மனு அளித்தனர்.