கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,, 70

சனி, ஆகஸ்ட் 26, 2017

சீருடைத் துணிகளுக்கு வடக்கில் பற்றாக்குறை

கொழும்பு கல்வி அமைச்­சால் வடக்­கு­மா­கா­ணத்துக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான சீரு ­டைத்­து­ணிகள் பற்­றாக்­குறையாகக் உள்ளன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாட­சா­லை­க­ளில் கற்­கும் மாண­வர்­க­ளுக்கு இல­வச சீரு­டைக்­குப் பதி­லாக முத்­திரை வவுச்­சர் மூலம் சீரு­டைத் துணிகள் வழங்­கும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
கல்வி அமைச்­சில் தேங்­கிக் காணப்­பட்ட சீரு­டைத்­து­ணி­கள் வடக்கு மாகாண கல்வி வல­யங்­கள் ஊடாக மாண­வர்­க­ளுக்கு வழங்­க­வென சில நாள்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ளன.
பாட­சா­லை­க­ளில் ஆரம்­பப்­பி­ரி­வு­க­ளில் கற்­கும் ஆண் மாண­வர்­க­ளுக்கு வழங்கக்­கூ­டி­ய­தான அள­வு­க­ளில் இவை அனுப்­பப்­பட்­டுள்­ளன. வெள்­ளைத் துணி­களை அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் வழங்கமு­டி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. எனவே இவற்றை பாட­சா­லை­க­ளில் கற்­கும் பொரு­ளா­தார நிலை­யில் பின்­தங்­கிய குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆரம்­பப் பிரிவு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­ன என்று தெரி­விக்­கப்­பட்­டது.