செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

யாழ். மாவட்ட வாகன இலக்கத் தகடு விவரங்கள் இணையத்தளத்தில்

யாயாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்குக் கிடைக்கப் பெற்றமை தொடர்பான விவரங்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே பார்வையிட்டு வந்தனர்.

அதை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாகத் தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அந்த விவரங்களை பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சேவையை www.jaffna.dist.gov.lk எனும் மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத் தளத்துக்குள் நுழைந்து வலது பக்க மூலையில் vehicle number plates என்ற தெரிவின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறையின் மூலம் வீட்டில் இருந்தவாறே தமது வாகன இலக்கத் தகடுகள் கிடைத்துள்ளனவா என்பதை அறிந்து கொண்டு திருப்திகரமான அரச சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன.