தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

ஜீவசமாதி அடையும் நோக்கில் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

1991 மே 21-ம் தேதி சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவு குரல்கள் எழுந்து வருகிறது. இதையடுத்து, அவர்களை விடுவிக்கத் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில், வேலூர் சிறையில் 26 ஆண்டுகளாகத் தண்டனை பெற்று வரும் முருகன் கடந்த மாதம் ஏ.டி.ஜி.பி-க்கு மனு ஒன்றை அளித்தார்.

அதில், "26 ஆண்டுகள் சிறை வாழ்க்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, நான் ஜீவசமாதி அடைய முடிவெடுத்துள்ளேன். இதையொட்டி, வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் நான் உணவு உட்கொள்ளப்போவதில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து, ஜீவசமாதி அடைய எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" என்று முருகன் கூறியிருந்தார்.

அதன்படி முருகன் ஜீவசமாதி அடையும் நோக்கில் கடந்த 18-ம் தேதியில் இருந்து சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் சிறை விதிகளை மீறி அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் முருகனை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் அறைக்கு தனி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முருகன் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால் சிறைத்துறை சலுகைகள் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.