புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஆகஸ்ட் 28, 2017

பொதுக்குழுவை கூட்டி சசிகலா, தினகரனை நீக்க எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா, தினகரன் கட்சி நடவடிக்கைகள் செல்லாது. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். அதிமுகவுக்கு சொந்தமான ஊடகங்களை கைப்பற்றவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை விரைவில் கூட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.