ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

வடக்கு மாகாண அமைச்சுப் பதவி - புளொட்டுக்குள்ளேயும் கழுத்தறுப்பு



அமைச்­சுப் பதவி வழங்கப்­பட்டால் அதனை ஏற்­றுக் கொள்வ­தற்­குத் தயாராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முதலமைச்­ச­ருக்கு  வவு­னியா மாவட்ட  உறுப்­பின­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். இருப்­பி­னும் அவரை அமைச்­ச­ராக நிய­மிப் ப­தற்கு அவ ரது கட்­சி­யான புளொட்­டி­னுள் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அமைச்­சுப் பதவி வழங்கப்­பட்டால் அதனை ஏற்­றுக் கொள்வ­தற்­குத் தயாராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முதலமைச்­ச­ருக்கு வவு­னியா மாவட்ட உறுப்­பின­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். இருப்­பி­னும் அவரை அமைச்­ச­ராக நிய­மிப் ப­தற்கு அவ ரது கட்­சி­யான புளொட்­டி­னுள் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளதுவடக்கு மாகாண அமைச்­ச­ரவை கடந்த ஜூன் மாதம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும்­போது அமைச்­சுப் பத­வியை ஏற்­றுக் கொள்­ளு­மாறு ஜி.ரி.லிங்­க­நா­த­னி­டம் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரி­யி­ருந்­தார். அதற்கு அவர் மறுப்­புத் தெரி­வித்­தி­ருந்­தார்.

”வடக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ராக இருந்த பொ.ஐங்­க­ர­நே­ச­னுக்கு எதி­ராக ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை மாகாண சபை­யில் முன்­வைத்­தி­ருந்­த­வன் என்ற அடிப்­ப­டை­யில்இ அமைச்­சுப் பத­வியை ஏற்­றால் பத­விக்­கா­கத்­தான் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைத்­தேன் என்று சொல்­லப்­ப­டும் என்­ப­தால் பதவி ஏற்க மாட்­டேன்” என்று அவர் அப்­போது குறிப்­பிட்­டி­ருந்­தார்.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­குத் திடீ­ரென சில தினங்­க­ளுக்கு முன்­னர் மின்­னஞ்­சல் அனுப்­பி­யுள்ள ஜி.ரி.லிங்­க­நா­தன் அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டால் ஏற்­கத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார். ”முன்­னர் அமைச்­சுப் பதவி கோரிய போது மாவட்­டத்­தில் வேறு ஒரு­வர் (அமைச்­சர் சத்­தி­ய­லிங்­கம்) அமைச்­ச­ராக இருந்­தார். இப்­போது அவர் அமைச்­ச­ராக இல்லை. எனது ஆத­ர­வா­ளர்­க­ளும் அமைச்­சுப் பத­வியை ஏற்­கச் சொல்­வ­தால் அமைச்­சுப் பதவி வழங்­கி­னால் ஏற்­றுக் கொள்­வேன்” என்று அவர் தனது மின்­னஞ்­ச­லில் குறிப்­பிட்­டுள்­ளார்.
”லிங்­க­நா­தன் அமைச்­சுப் பதவி வேண்­டாம் என்று கூறி­யி­ருந்­தார். பத்­தி­ரி­கை­யில் படித்­தேன். முத­ல­மைச்­ச­ரும் கூறி­யி­ருந்­தார். அவர் கொள்கை அடிப்­ப­டை­யில் அந்­தத் தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தார். அவ­ருக்கு அமைச்­சுப் பதவி வழங்­கு­மாறு நான் கோரி­னால் கொள்­கை­யில்­லா­த­வ­னாக நான் ஆகி­வி­டு­வேன்” என்று புளொட் அமைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்­தன் உத­ய­னி­டம் தெரி­வித்­தார்.