தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

வித்தியா படுகொலைக்கு கடற்படையே காரணம்! - சுவிஸ்குமாரின் தம்பி சாட்சியம்

கடற்படையினரே புங்குடுதீவு மாணவி வித்தியாவை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.
கடற்படையினரே புங்குடுதீவு மாணவி வித்தியாவை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று எதிரித் தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் இன்று சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

சாரதாம்பாள், தர்சினி கொல்லப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுக்க அறிவித்து எமக்கு எதிரான எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டனர். சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாம் இந்தக் குற்றத்தைச் செய்யததாலேயே உயிரோடு இருக்கின்றோம் என்று அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.