வியாழன், ஆகஸ்ட் 24, 2017

பாவனையற்ற கிணற்றில் பெண்ணின் சடலம் – சித்தன்கேணியில் சம்பவம்

யாழ்ப்பாணம், சித்தன்கேணியில் பாவனையற்ற கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாக துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் தேடிப்பார்த்தபோது கிணற்றுக்குள் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.