கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,,விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான குறித்த சிவப்பு அறிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக,உதயங்க வீரதுங்க,, பூகோள அரசியல் போட்டியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார் சம்பந்தன்! 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ள, கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தயார்! - ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.“
மாகாணசபை தேர்தலைப் பிற்போடுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் யாப்பு திருத்தப்பட வேண்டும். அந்த அறிவித்தல் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக சில சிவில் அமைப்புகள் வழக்குத்தாக்கல் செய்வதற்குத் தயாராகி விட்டன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.“ மாகாணசபை தேர்தலைப் பிற்போடுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் யாப்பு திருத்தப்பட வேண்டும். அந்த அறிவித்தல் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக சில சிவில் அமைப்புகள் வழக்குத்தாக்கல் செய்வதற்குத் தயாராகி விட்டன.

வடமத்தி, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், தேர்தலைப் பிற்போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் பல கட்சிகள் அதிருப்தியடைந்த நிலையில் இருக்கின்றன. கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர். இதுதவிர, வட்டாரமுறை ரீதியிலான தேர்தல் முறை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. எந்தச் சூழ்நிலை வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு முகம் கொடுக்க என்றும் தயாராகவே இருக்கின்றது.

வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தொடர்பில் தேசியக் கட்சிகள் அச்சம் கொள்கின்றன. ஆனால், கிழக்கு மாகாண சபையைப் பெறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலை எதிர்கொள்ள என்றும் தயாராகவே இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன வாரிசுரிமை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றன. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாரிசுரிமைக்கு குழிபறித்த கட்சி என்று சொல்லாம். இது பாமர மக்களின் கட்சி.

அமைச்சர் பதவி இருந்தால் மட்டும்தான் சிலரின் கட்சிகள் உயிரோடு இருக்கும். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சுப் பதவியைத் தூக்கியெறிந்த காலங்களில் தான் அபாரமாக வளர்ச்சி கண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்