புதன், ஆகஸ்ட் 23, 2017

என்னை நீக்கினால் ஆட்சி இருக்குமா?'' சிறையில் சசிகலா

இணைப்பு நடந்தால் என்ன செய்வது என சசிகலா சொன்ன கட்டளைப்படி சட்டரீதியான ஆலோசனைகளிலும் தினகரன் இறங்கியுள்ளார். முதல்கட்டமாக,
தன்னை நீக்கியது சட்டப்படி செல்லாது என எடப்பாடி பழனிச்சாமிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார் தினகரன்.

"சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்த்து லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களை திரட்டி தேர்தல் கமிஷனிலும் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடர தினகரனின் வீட்டில் வழக்கறிஞர்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

ஓ.பி.எஸ். அணி இ.பி.எஸ்.ஸுடன் இணைவதை ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள்தான் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதையும் மீறி ஓ.பி., இ.பி.எஸ்.ஸுடன் இணைவதற்கு காரணம், துபாயில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்கு கொடுத்த 500 கோடி ரூபாய்தான்'' என்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ.