புதன், ஆகஸ்ட் 16, 2017

டி.டி.வி.தினகரன் எனது காலில் விழுந்தார்: திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சசிகலாவின் காலில் விழுந்து தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் பதவியை பெற்றார். அந்த பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்து விட்டு பேசட்டும் என கூறியிருந்தார்.

அது குறித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள கடலூர் வருகை தந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், மரியாதை நிமித்தமாகத் தான் நான் சசிகலா காலில் விழுந்தேன். துணைப் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதும் டி.டி.வி.தினகரன் எனது காலிலும், அமைச்சர் செங்கோட்டையன் காலிலும் விழுந்தார் என்றார். மேலும் பொதுவாக மத்திய அரசு கூறுவதை மாநில அரசு கேட்க தான் வேண்டும் என்றார்.