திங்கள், ஆகஸ்ட் 21, 2017

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!சென்னையில் அதிமுக இரு அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்) - நிதித்துறை, வீட்டு மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை,  மாபா பாண்டியராஜன் - தமிழ் கலாச்சாரத்துறை, தொல்லியல்துறை, உடுமலை ராதாகிருஷ்ணன் - கால்நடைத்துறை. பாலகிருஷ்ணா ரெட்டி - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சி.வி.சண்முகம் கூடுதல் பொறுப்பு - கனிம வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கவர்னர் மாளிகையில் நடந்து வருகிறது.