வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

போலீசாரின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் வேதா இல்லம்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வேதா இல்லத்தில் இருந்த தனியார் நிறுவன பாதுகாவலர்கள் வெளியேற்றப்பட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தோட்ட பணியாளர்களை தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. பணியாளர்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்