செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

பதற்றத்தில் வடமராட்சி கிழக்கு! - முன்னொரு போதும் இல்லாத வகையில் யானை பீதி

வட­ம­ராட்சி கிழக்­கில் ஊருக்­குள் யானை புகுந்­த­மை­யி­னால் நேற்று இயல்­பு­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­கள் பயத்­து­ட­னேயே இர­வுப் பொழுதைக் கழித்­த­னர். யானைத் தாக்­கு­தல் அச்­சத்­தால் சில குடும்­பங்­கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறி அயல் பகு­தி­யில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளன. வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லர் பிரி­வின் உடுத்­துறை, ஆழி­ய­வளை பிர­தே­சங்­க­ளில் யானை நட­மாட்­டம் நேற்று முன்­தி­னம் இரவு அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகுதி மக்­கள் நெருப்பு எரித்து யானையை விரட்ட முயற்­சித்­துள்­ள­னர். ஆனால் யானை அந்­தப் பகு­திக்­குள்­ளேயே சுற்­றித் திரிந்­துள்ளது.

யானை ஊருக்­குள் வந்த விட­யம் நேற்­றுக் காலை தீயா­கப் பர­வி­யது. மக்­கள் பெரும்­பா­லும் வீடு­க­ளுக்­குள் முடங்­கி­னர். யானை நடமாடுவதாகத் தெரிவிக்கப்பட்ட மருதங்கேணிச் சந்தியிலிருந்து உடுத்துறை நோக்கிச் செல்லும் வீதி மூடப்பட்டது. வீதியில் மரக்குற்றிகள் போடப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். கடைகள் பூட்டப்பட்டு இயல்பு நிலை முடங்கியிருந்தது.

அதேவேளை, எமது பிர­தே­சத்­தில் இது­வரை கால­மும் யானை இருந்­த­தில்லை. எமக்­குத் தெரிந்து 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக இங்கு யானை வந்­த­தா­கக் கூடக் கேள்­விப்­பட்­ட­தில்லை. திடீ­ரென யானை ஊருக்­குள் புகுந்­தமை எங்­க­ளுக்கு பலத்த சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. யானை திட்­ட­மிட்டு கொண்டு வந்து இறக்கி விட்­டார்­கள் என்றே நாம் கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது” இவ்­வாறு வட­ம­ராட்சி கிழக்கு மக்­கள் நேற்­றுத் தெரி­வித்­த­னர்.

இப்படியான சம்பவம் எங்களுக்குத் தெரிஞ்சு ஒரு 70 வருசத்துக்கு மேலாக நடக்கவில்லை. அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கின்றது. நேற்று (நேற்றுமுன்தினமே) யானை ஊருக்குள் வந்தவுடன் அதைக் கலைத்திருந்தால் – வன உயிரினங்கள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று (நேற்று) உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. பறவைகள் சரணலாயம் என்ற பெயரில் ஏற்கனவே எமது காணிகளை அரசு கபளீகரம் செய்துள்ளது. இப்போது யானை இங்கு திட்டமிட்டு இறக்கி எஞ்சிய பகுதிகளையும் அவ்வாறு கபளீகரம் செய்வதற்குத்தான் முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது. யானையைக் கலைக்க வந்தவர்கள் இரவு 7 மணியுடன் போய்விட்டார்கள். இரவு யானை வந்தால் நாம் என்ன செய்வது” என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.