புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

நானே இன்னமும் அமைச்சர்! - ஆளுனர், முதல்வருக்கு டெனீஸ்வரன் கடிதம்

தனது பதவி பறிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும், தன்னைப் பதவிநீக்கம் செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வர்ன, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நேற்று தனித்தனியே கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார்.

தான் இன்னமும் வடக்கு மாகாணசபையின் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்வதாகவும் டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நேற்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் டெனீஸ்வரன் மிக அமைதியாக இருந்தார். அவர் அமைச்சுப் பதவிகள் குறித்தோ நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் குறித்தோ வாய்திறக்கவில்லை. இதேவேளை தனது அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிராக அவர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன