புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

நேற்று சுவிசில் நடைபெற்ற உலகளாவிய தமிழர் உதைபந்தாட்ட சுற்று போட்டிவில் களமாடி பெருமை மிகு தமிழீழக்கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது சுவிஸ் யங் ஸ்டார் கழகம் . .நேற்றைய தினம் கனடா தெரிவு அணி டென்மார்க் தெரிவு அணி ஹோலந்து தெரிவு அணி மற்றும் பிரித்தானிய மகாஜன அணி பிரித்தானிய அணி டென்மார்க் யங் ஸ்டார் அணி நோர்வே ஸ்டோனர் அணி உட்பட சுவிசின் தலை சிறந்த ஏழு கழகங்களும் இந்த சுற்று போட்டியில் மோதிக்கொண்டன இறுதி வரை எந்த கோலும் வாங்காது எந்த போட்டியிலும் தோற்காது களமாடிய எமது கழகம் இறுதியாட்டத்தில் பலமிக்க டென்மார்க் தெரிவு அணியை 3-1 என்ற ரீதியில் வீழ்த்தி கிண்ணத்தை தமதாக்கியது அத்தோடு சுவிசில் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் ஒழுங்குபடுத்தும் தர வரிசையில் இந்த வருட சுற்றில் முதலிடத்தை அடைந்து சுவிஸ் சாம்பியனாகி உள்ளதும் விசேசமானது தொடர்ந்து நான்காவது வருடமாக தொடர்ந்து சுவிஸ் சம்பியனாகி வருகிறது யங் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது